திருநெல்வேலி மாவட்டதில் பணிரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டோ அல்லது விபத்து ஏற்ப்பட்டோ மருத்துவ சிகிக்சை பெறும் போது மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் போது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் நலன்கருதி 09.08.2019 ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காவல் உதவி கண்காணிப்பாளர் காவல் துணை கண்காணிப்பாளர்கள், மருத்துவ காப்பீட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் மேலாளர்கள், திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட
ஒருங்கிணைப்பாளர்கள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து மருத்துவமனை ஒருங்கினைப்பாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உட்பட சுமார் 70 பேர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும்போது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வது சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு ஆணையில் கண்டுள்ளபடி மருத்துவ சிகிச்சை வழங்குமாறு அனைத்து மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும்
மருத்துவர்களுக்கு காவல் கண்காணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டது.