நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் வேலையிழப்புக்கும், பொருளாாதார வளர்ச்சி வரலாற் றில் இல்லாத சரிவைச் சந்தித்தற்கும் மத்தியஅரசின் கொள்கைகள்தான் காரணம், மக்களின் குரலை மோடி அரசு கேட்குமாறு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, கரோனா வைரஸைத் தடுப்பதில் மத்திய அரசின் செயல்பாடு, வேலையின்மை ஆகியவை குறித்து காங்கிரஸ் முன் னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியா ண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந் தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானபின், மத்திய அரசை விமர்சிக் கும் வேகத்தை ராகுல் காந்தி வேகப்படுத்தியுள்ளார். பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாவை என்ற தலைப்பில் இதுவரை 4 வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் வேலையி ன்மை பிரச்சினையை தீர்க்கும் வகையில் வேலைக்காக குரல்கொடுப்போம் என்ர தலைப்பில் இன்று காலை 10 மணியிலிருந்து 10 மணி நேர பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள் ளது. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கரு த்தில் “ மோடி அரசு வகுத்த கொள்கைகளால்தான் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்தார் கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வரலாற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசின் கொள்கைகள் நசுக்கிவிட்டன. இளைஞர்களின் குரல்களை அரசு கவனிக்க வைப்போம்” எனக் குற்றம்சாட்டியுள்ளார். காங்கி ரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஆண் டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்தார். ஆனால், 6 ஆண்டுகளில் 12 கோடிவேலைவாய்ப்புகள் வழங்கு வதற்கு பதிலாக, 14 கோடிபேரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் தற்போது விழித்துக்கொண்டு, பதில் கேட்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ பேரழிவுகளை உருவாக்கும் ஒவ்வொரு கொள்கைகளால், பாஜக அரசு, கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்வாதரத் தை பறித்து விட்டது, இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளியுள்ளது. வேலை க்காக குரல் கொடுப்போம் எனும் பிரச்சாரத்தில் இணையுங்கள். பாஜக அரசின் தவறான சாதனைகளை எதிர்த்து உங்களின் குரலை எழுப்புங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது