குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாளர் நலயுதவிகள் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் காவல் துணை ஆணையாளர் H.ஜெயலட்சுமி 14.9.2020 அன்று சென்னை W-12 துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை பார்வையிட்டு நிலையப் பதிவேடுகளை ஆய்வு செய்து புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைவில் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்கவும்
அறிவுரைகள் வழங்கினார். மேலும் அங்கு பணிபுரியும் பெண் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெலிஸ் தெருவிற்கு நேரில் சென்று கோவிட்-19, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய சட்டங்களான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைத் திருமண தடை சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம் வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றியும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தயக்கமின்றி எந்த நேரத்திலும் காவல்துறையை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாளர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுடன் இணைந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.