அப்துல்கலாம் வாழ்க்கையினை பாடமாகக் கொண்டு மாணவ மாணவியர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற அயராது உழைத்திட வேண்டும் – ஆட்சியர் வீரராகவராவ்

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் காதர் டீலக்ஸ் என்ற தனியார் மஹாலில் 10.08.2019 பள்ளிக்கல்வித் துறை மற்றும் பத்மராஜம் கல்விக்குழுமம் ஒருங்கிணைந்து பள்ளி மாணவ மாணவியர்கள் நலனுக்காக ஏற்பாடு செய்த ‘வெற்றி மேல் வெற்றி” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வீர ராகவராவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நான்காம் தமிழ்ச்சங்கம் தலைவர் ராஜா திரு.நா.குமரன்சேதுபதி அவர்கள், மதுரை செந்தமிழ் கல்லூரி செயலாளர் ராணி திருமதி.ந.இலெட்சுமி குமரன்சேதுபதி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது.

                         

தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்கள் நலனுக்காக பள்ளிக்கல்வித் துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவ மாணவியர்களுக்கு தன்னம்பிக்கையினை மேம்படுத்திடும் வகையிலும் தங்களது எதிர்காலம் குறித்து தெளிவான சிந்தனையை ஏற்படுத்திட உறுதுணை புhpயும் வகையிலும் பத்மராஜம் கல்விக்குழுமம் என்ற தனியார் அமைப்புடன் ஒருங்கிணைந்து இந்த விழிப்புணர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. 2018-19ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் முதல் இடத்தையும், அனைத்து பள்ளிகளின் தேர்ச்சியில் மாநில அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. மாணவ, மாணவியர்கள் கல்வியறிவோடு

    

நல்லொழுக்கத்தையும் சமூக அக்கறையினையும் வளர்த்திட வேண்டும். தங்களது எதிர்கால வளர்ச்சிக்காக தங்களுக்கு விருப்பமான எந்த துறையினை தேர்வு செய்தாலும் நல்லொழுக்கம் கடின உழைப்பு என்ற இரண்டு பண்புகளே வெற்றிக்கு வழிவகுக்கும். நமது தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து உலகம் போற்றும் வகையில் உயர்ந்து காட்டியவர். அவரது வாழ்க்கையினை பாடமாகக் கொண்டு மாணவ, மாணவியர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற அயராது உழைத்திட வேண்டும். அதே வேளையில், சமூக அக்கறையுடன் மரக்கன்று நடுதல் மழைநீர் சேகாpப்பு அமைப்பு ஏற்படுத்துதல் போன்ற நற்காரியங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) திரு.ஜி.முத்துச்சாமி, பத்மராஜம் கல்விக்குழுமம் தலைவர் திரு.ப.பாலன், புலவர் திரு.வை.சங்கரலிங்கம், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூhp வணிக நிர்வாகவியல் துறை தலைவர்டாக்டர்.எஸ்.நாராயணராஜன், திரு.சி.ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.