இந்திய வானியல் துறையின் புயல் எச்சரிக்கை மையத்தின் அறிவிப்பு: வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் 2020 அக்டோபர் 9 அன்று புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த மண்டலம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்தமாக மாறி ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிஷா கடலோரங்களை நோக்கி முன்னேற வாய்ப்புள்ளது. இதனால் ஆங்காங்கே அதிக அளவில் மழை அக்டோபர் 4 முதல் 6 வரை ஒடிஷாவிலும், அக்டோபர் 4, 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் ஜார்கண்டிலும், அக்டோபர் 4 முதல் 7 வரை சத்தீஸ்கரிலும் பெய்யும் என்று திர்பார்க்கப்படுகிறது.
2020 அக்டோபர் 11 முதல் 13 வரை, ஒடிஷா மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் அதிக அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு அந்தமான் கடல், கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.