அரசியலுக்கு வராதீங்க – தாங்க மாட்டீங்க – பேரனோட விளையாடுங்க.. இமயமலைக்கு போங்க..; ரஜினிக்கு சீமான் அறிவுரை

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்ற பனைத் திருவிழாவின் போது செய்தியாளார்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது ரஜினிகாந்த் பற்றி பேசினார் சீமான். “ரஜினி அவருடைய கட்சியில் வேறொரு நபரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என்று சொன்னதும் அவருடன் இருந்த முரண்பாடு நீங்கிவிட்டது. நடிகர் ரஜினிகாந்துக்கு நான் வைக்கக்கூடிய வேண்டுகோள் என்னவென்றால்… அவர் அரசியலில் இறங்க வேண்டாம். புகழ்ச்சியை மட்டுமே பார்த்தவர் அவர். நாங்கள் சந்திப்பது போன்ற அவச்சொற்களை அவரால் தாங்க முடியாது. இமயமலை செல்லுங்கள், புத்தகம் படியுங்கள், பேரன் பேத்தியுடன் விளையாடுங்கள்” என தெரிவித்துள்ளார் சீமான்.