போலிப் பல்கலைக்கழகங்கள் எவை? பெயர்ப் பட்டியலை வெளியிட்டது யுஜிசி: உ.பி.யில் அதிகம்; 2-வது இடத்தில் டெல்லி

நாட்டில் உள்ள அங்கீகாரம் பெறாத, 24 போலிப் பல்கலைக்கழகங்களின் பெயர்ப் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதுகுறித்துப் பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறியதாவது: ”மாணவர்கள், பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவிப்பு என்னவென்றால், நாட்டில் மொத்தம் 24 பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி, அங்கீகாரம் பெறாமல் பல்கலைக்கழகம் எனச் சொல்லி நடத்தி வருகிறார்கள். அவை போலியான பல்கலைக்கழகங்கள் என யுஜிசியால் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சேர்ந்து மாணவர்கள் படிக்கவும், பட்டம் வாங்கவும் வேண்டாம். அவ்வாறு இருந்தால் அது செல்லுபடியாகாது. இதில் 8 பல்கலைக்கழங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்திலும், டெல்லியில் 7 பல்கலைக்கழகங்கள், ஒடிசா, மே.வங்கத்தில் தலா 2 பல்கலைக்கழங்கள் உள்ளன. தவிர கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, மகாராஷ்டிராவில் தலா ஒரு பல்கலைக்கழகம் உள்ளது”. இவ்வாறு ஜெயின் தெரிவித்துள்ளார்.

போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியல்

உத்தரப் பிரதேசம்

1. வாரணாசி சான்ஸ்கிரிட் வித்யாலயா, வாரணாசி.
2. மகிலா கிராம் வித்யாபீடம் வித்யாலயா, பிரயாக், அலகாபாத்.
3. காந்தி இந்தி வித்யாபீடம் , பிரயாக்.
4. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி, கான்பூர்.
5. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் யூனிவர்சிட்டி, அலிகார்.
6. உத்தரப் பிரதேசம் விஷ்வ வித்யாலயா, மதுரா
7. மகாரன் பிரதாப் சிக்ஸா நிகேதன் விஸ்வா வித்யாலயா, பிரதாப்கார்க்
8. இந்திர பிரஸ்தா சிக்ஸா பரிசத், நொய்டா

டெல்லி

1. கமர்ஷியல் யுனிவர்சிட்டி, தர்யாங்கஜ் டெல்லி
2. யுனிடெட் யுனிவர்சிட்டி, டெல்லி
3. வொகேஷனல் யுனிவர்சிட்டி, டெல்லி
4. ஏடிஆர் ஜூடியசியல் யுனிவர்சிட்டி, டெல்லி
5. இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் அன்ட் இன்ஜினீயரிங், டெல்லி
6. விஸ்வகர்மா ஓபன் யுனிவெர்சிட்டி, டெல்லி
7. ஆத்யாமிக் விஸ்வாவித்யாலயா, டெல்லி

கர்நாடகா

படாகன்வி சர்க்கார் ஓபன் யுனிவர்சிட்டி எஜுகேஷன் சொசைட்டி, பெல்காம்.

கேரளா
செயின்ட் ஜான்ஸ் யுனிவர்சிட்டி, கிஷ்ஷானத்தம், கேரளா.

மகாராஷ்டிரா

ராஜா அராபிக் யுனிவெர்சட்டி, நாக்பூர்.

மேற்கு வங்கம்

1. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ் மெடிசன், கொல்கத்தா.
2. இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ் மெடிசன் அண்ட் ரிசார்ச், கொல்கத்தா.

ஒடிசா
நவபாரத் சிக்ஸா பரிசத், ரூர்கேலா.
நார்த் ஒரிசா யுனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்சர் அண்ட் டெக்னாலஜி ,மயூர்பாஞ்.

புதுச்சேரி
ஸ்ரீ போதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், புதுச்சேரி.

ஆந்திரப் பிரதேசம்

கிறிஸ்ட் நியூ டெஸ்டாமென்ட் டீம்டு யுனிவர்சிட்டி , குண்டூர்.