“விடுதலைப் புலிகள்” இயக்கம் தீவிரவாத இயக்கமென அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகள், விஜய்சேதுபதியைப் பற்றி பேசலாமா? – இயக்குநர் பேரரசு கேள்வி

முத்தையா முரளிதரன் தமிழின துரோகி!  விடுதலை புலிகளுக்கு எதிரானவர்!  அவரின் வாழ்க்கை வரலாறு படமான ‘800’ திரைப்படத்தில் விஜயசேதுபதி நடிக்கக் கூடாது என்று இன்று தமிழ்ப் பற்றோடு பல கண்டனக் குரல்கள், எதிர்ப்புக் குரல்கள்.  இது வரவேற்கக்கூடிய விஷயம்தான்!

இன்று குரல் குடுக்கும் சில அரசியல்வாதிகள்  ‘விடுதலை புலிகள்’ தீவிரவாத இயக்கம் என்று அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்ததே, அப்பொழுது எங்கே போனது இந்த தமிழ்ப்பற்று?
தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிப்பதற்கு இங்கு சில கட்சிகளே காரணமாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக் குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை?.  விடுதலை புலிகளையும், ,ஈழ தமிழினத்தை அழிப்பதற்கு ஒரு தேசியக் கட்சி உறுதுணையாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக் குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை? . மூன்று மணிநேர சினிமாவிற்கு இவ்வளவு எதிர்க்கும் நீங்கள், தமிழினம் அழியக்காரணாம இருந்த சில கட்சியிடம், ஆளுவதற்கு  தமிழ்நாட்டையே ஒப்படைக்க துடிக்கிறீர்களே!.  இப்பொழுது எங்கே போனது உங்கள் தமிழ்ப்பற்று!. ஒருவர் வேடத்தில் ஒரு சினிமா நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது! ஆனால் ஆளக்கூடாதவர்கள் ஆண்டால் இந்த நாடு சீரழிந்து விடும்!  இந்தப் பதிவு முத்தையா முரளிதரன்க்கு ஆதரவானது அல்ல! சில தமிழப்பற்று வேடதாரிகளுக்கு எதிரானது. இவ்வாறு திரைப்பட இயக்குநர் பேரரசு கேள்வி எழுப்பியுள்ளார்.