தெலுங்கு திரையுலகின் தற்போதைய தலைசிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவராக உலா வருபவர் இளம் தயாரிப்பாளர் கிரண் கே. தலசீலா. இவர், தெலுங்கு திரைப்படம் ‘பலே மஞ்சி சவுகா பேரம்’ (2018) படத்தின் வாயிலாக இணை தயாரிப்பாளராக தடம் பதித்தார். சினிமா துறையில் கால்பதித்த மிகக் குறுகிய காலகட்டத்தில், ‘பிரதி ரோஜு பண்டகே’ போன்ற வெற்றிப் படங்களில் தனது பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளார். 2019-ல் கிரண் தெலுங்கு மற்றும் கன்னட
திரைத்துறையில் ஒரே வேளையில் கால்பதித்தார். ஜீவாவின் ‘கொரில்லா’ படத்தில் கிரண் அசோசியேட் தயாரிபாளராக இருந்தார். கன்னட திரைப்படமான ‘நன்ன பிரகாரா’-வில் அவர் இணை தயாரிப்பாளராக இருந்தார். இந்தாண்டு தொடக்கத்தில் பாலிவுட்டையும் தொட்டு விட்டார். ‘ஏ காஷ் கே ஹம்’ (Ae Kaash Ke Hum) அவரின் பாலிவுட் அறிமுகப்படம். விஷால் மிஸ்ரா இப்படத்தை இயக்கி இருந்தார். விவான் ஷா, பிரியா சிங், சோஃபியா சங் முக்கிய
கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது கிரண், முழு நேர தயாரிப்பாளராக தடம் பதித்து விட்டார். அதற்கான அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கிரணின் புதிய படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்ட் ஃபேஸ் என்டர்டெய்ன்மென்ட் மூலம் கிரண் தனது முழு நேர தயாரிப்புப் பணி கணக்கைத் தொடங்கியுள்ளார். கலைத் துறையில் பல சிறந்த படைப்புகளை வெளிக் கொண்டு வந்து சினிமா ரசிகர்களை குதூகலிப்பார் என்றே சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.