அபுதாபி அய்மான் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (01-11-2020) மாலை இஷா தொழுகைக்குப் பின் 7:30 மணிக்கு அய்மான் சங்க முன்னாள் தலைவரும்,அய்மான் பைத்துல் மால் தலைவருமான அதிரை.ஷாஹுல் ஹமீத் சாஹிப் அவர்கள் தலைமையில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் சிறப்பாக நடைபெற்றது. அய்மான் பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, மறைந்த தலைவர் கனிமொழிக் கவிஞர் மர்ஹூம் ஜெ.ஷம்சுத்தீன் சாஹிப் சேவைகளை நினைவு கூர்ந்தும், சில தினங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துணைப் பொதுச் செயலாளர் பூந்தை.ஹாஜா அவர்களின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து வரும் தகவலையும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து சங்கத்தின் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டியதை எடுத்துரைத்தார். கூட்டத்தில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்: கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன்,
துணைத் தலைவர்கள்: மதுக்கூர் ஒய்.எம்.அப்துல்லாஹ் மற்றும் கீழக்கரை ஜே.எஸ்.ஃபரீத்,
நிர்வாகச் செயலாளர்: ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர்,
துணைப் பொருளாளர்: பசுபதிகோவில் சாதிக் பாட்ஷா,
மக்கள் தொடர்புச் செயலாளர்: தேவிப்பட்டிணம் ஹாஜா முபீனுத்தீன்,
விழாக் குழு செயலாளர்: காயல் ஏ.ஆர்.ரிபாயி சுல்தான்
அய்மான் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்: காயல் எஸ்.ஏ.சி.ஹமீது
உள்ளிட்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 4-ம் தேதி இரத்ததான முகாம் நடத்துவது. அய்மான் பைத்துல் மால் சேவையின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, பைத்துல் மால் பணிகளை மேலும் விரிவு படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை.ஏ.ஷாஹுல் ஹமீது,அய்மான் துணைத் தலைவர் மதுக்கூர் அப்துல்லாஹ், பொருளாளர் லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி,சமூக நலப் பணிச் செயலாளர் மன்னார்குடி பிர்தோஸ் பாஷா, பைத்துல் மால் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன் ஆகியோர் சங்கத்தின் எதிர் கால திட்டங்கள் குறித்து கருத்துரை வழங்கினர். இறுதியாக துஆவுடன் கூட்டம் நிறைவடைந்ததது.