2020-21 ல் இந்தியாவின் ஏற்றுமதியின் மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்குமாம்

ஏப்ரல்-அக்டோபர் 2020-21*-இல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் மதிப்பு (பொருள்கள் மற்றும் சேவைகள்  இணைந்து) 265.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே  காலத்துடன் ஒப்பிடும் போது (-)14.53 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது காட்டுகிறது.

ஏப்ரல்-அக்டோபர் 2020-21*-இல் ஒட்டு மொத்த இறக்குமதியின் மதிப்பு 248.58 பில்லியன் அமெரிக்க டாலர்களாக  இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது (-)31.89 சதவீதம் என்னும்  விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது காட்டுகிறது. குறிப்பு: சேவைகள் துறைக்காக இந்திய ரிசர்வ் வங்கியால்  வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரவுகள் செப்டம்பர் 2020-க்கு உரியவை ஆகும். அக்டோபர் 2020-க்கான தரவுகள்  மதிப்பீடுகளே ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்தடுத்த வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டு அவை  திருத்தப்படும்.