“பூப் பூவாய் பூத்திருக்கும் பூமியிலே ஆயிரம் பூ, பூவிலே சிறந்த பூ என்ன பூ ? – எனும் சுசீலா பாடிய குலவிளக்கு’ பட கண்ணதாசனின் பாடல்போல, ஆயிரமாயிரம் பூக்கள் இந்த மண்ணிலே உண்டு. அந்த வகையில் புழகு மலரை அறியாதோர் எவரும் இருக்கமுடியாது. “தீ எரிவது போல இருக்கும். இந்த மலர் நாம் அனைவரும் அறிந்த எருக்கம் பூதான். இதனை எருக்கு, எருக்கமலர் என்றும் கூறுவர். வன்மையான இந்தப்பூவினை நச்சினார்க்கினியர் மலை எருக்கு என்கிறார். நெருக்கமாக வளரும் இச்செடிகளில் கிழங்கும் உண்டு. ஆடவர்களும் சூடும் இந்த மலர்ச் செடியை குளக்கரைகளிலெல்லாம் நிறையவே காணலாம். இதன் இலைகள் பாம்பு, தேள் கடிக்கு மருந்தாக விளங்குகிறது. கவிஞர் கபிலரின் குறிஞ்சிப்பாட்டு மலர்களில் தொன்னூற் றொன்பதாவது மலரராக ‘புழகு’ அமைந்துள்ளது. இந்த மலரோடு இந்தத் தொடர் நிறைவுறுகிறது.
வே. அரசு / 18-11-2020 பெங்களூரு