பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் உதவி பேராசிரியரான சந்தீப் ஈஸ்வரப்பா, மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஸ்வர்ண ஜெயந்தி உதவித் தொகைக்கு (ஃபெல்லோஷிப்) தேர்ந்தெடுக்கப்பட்ட 21 நபர்களில் ஒருவராவார். தசை நார் தேய்வு, குருதி அழிவு சோகை, இரத்தம் உறையா நிலை போன்ற நோய்களுக்கு புதிய வகையான மரபணு சிகிச்சையை சந்தீப் ஈஸ்வரப்பா முன்மொழிந்துள்ளார். இந்த நோய்களுக்குக் காரணமாக விளங்கும் மரபணு செயல்முறையை இந்தச் சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார். சந்தீப்பும், அவரது குழுவினரும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஸ்வர்ண ஜெயந்தி உதவித்தொகையின் மூலம், இவர்கள் தங்களது ஆராய்ச்சியை விரிவுபடுத்த முடியும். அவர்களது பணி வெற்றியடையும் பட்சத்தில், தசை நார் தேய்வு, குருதி அழிவு சோகை, இரத்தம் உறையா நிலை போன்ற நோய்களுக்கு புதுமையான தீர்வாக அமையும்.