சிம்லாவில் உள்ள இந்திய முன்னேறிய படிப்புகளுக்கான நிறுவனத்தின் 55-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதன் மாணவர்களோடு மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்’ காணொலி மூலம் உரையாற்றினார். இந்திய முன்னேறிய படிப்புகளுக்கான நிறுவனத்தை இந்தியாவின் பெருமைமிகு மகுடம் என்று வர்ணித்த அவர், 55-வது ஆண்டைக் கொண்டாடுவதற்காக அந்நிறுவனத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரைப் பாராட்டினார். புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி, இந்தியாவை உலகத்தின் குருவாக ஆக்குங்கள் என்று தன்னுடைய உரையின் போது அமைச்சர் வலியுறுத்தினார். புகழ்பெற்ற எழுத்தாளர் டாக்டர் யோகேந்திரநாத் சர்மா அருண், இந்திய முன்னேறிய படிப்புகளுக்கான நிறுவனத்தின் ஆட்சி மன்றக் குழு தலைவர் பேராசிரியர் கபில் கபூர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.