புதுமைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவும் போர்ச்சுக்கல்லும் இணைந்தது

புதிய தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு புதுமையை கண்டுபிடிக்கும் வழிகள் குறித்து அறிவியல் தொழில்நுட்ப துறை-சிஐஐ இந்தியா போர்ச்சுக்கல் தொழில்நுட்ப மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. அறிவியல் தொழில்நுட்ப துறை- சிஐஐ இந்தியா போர்ச்சுக்கல் தொழில்நுட்ப மாநாடு-2020 டிசம்பர் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்தது. இதில் துவக்கவுரையாற்றிய அறிவியல் தொழில்நுட்ப துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறியதாவது:

புதுமை என்பது சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய நலனின் புதிய இயந்திரம். ரோபோடிக்ஸ், எரிசக்தி மற்றும் சக்தி, உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு போன்றவற்றில் புதுமை முக்கிய பங்கு வகிப்பதைத் தவிர, சமூகத்தின் முக்கியமான தேவைகளையும் நிவர்த்தி செய்கிறது. எரிசக்தி, குடிநீர், போக்குவரத்து, உணவு பாதுகாப்பு, தரமான கல்வி, வங்கி சேவைகள் போன்றவற்றில் பயன்களை பெற, புதுமை படைக்கும் சரியான தொழில் சூழல் மீது கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்தியா மற்றும் போர்ச்சுககல் நாட்டின் புதிய தொழில் நிறுவனங்களை ஒன்றிணைத்து, புதுமைகளை கூட்டாக கண்டுபிடிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.