Netflix நிறுவனத்தின் சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நான்கு அழகான கதைகளின் வழியே சொல்கிறது இப்படம். தமிழின் திறன்மிகு இயக்குநரான வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு” சுமதி எனும் இளம்பெண் கர்ப்பமாக இருப்பதை, அவளது குடும்பம் அறிந்த பிறகு, அவள் குடும்பத்தினருடன் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களை, போராட்டத்தை சொல்லும் கதையாகும். அவளது தந்தை, அவளை ஏற்று கொண்டு, குழந்தையை குளிப்பாட்டும் சடங்கை நடத்த, அவளை வீட்டிற்கு கூட்டி வருகிறார். ஆனால் வீட்டில் நடக்கும் சம்பவம் அவளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.“ஓர் இரவு” படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது.
ஒரு தந்தைக்கும், மகளுக்குமான எளிய உறவு, வாழ்வின் பயணத்தில் எப்படி தடம் மாறுகிறது என்பதே கதை. எனது உள்ளுணர்வு சொல்ல விரும்பியது, கௌரவம் எனும் பெயரில் சமூககத்தில் குடும்ப அங்கம் ஒருவர் மீது ஒருவர் எத்தனை பெரிய வலியை உண்டாக்குகிறார்கள் என்பதே. “ஒர் இரவு” நம் சமூகத்தில் தற்போதும் நிலவிக் கொண்டிருக்கும் மூடத்தனத்தை, ஞாபகப்படுத்தும். அது நம் இதயத்தை சுக்குநூறாக்கி, வெட்கப்படவைக்கும் என்றார். மக்கள் தொடர்பு: டி.ஒன்.