காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படை வீரர்களின் குழந்தைகள் இணைய வழி கல்வி பயில 9 லட்சம் மதிப்புள்ள 177 டேப்லட் சாதனங்களை காவல்த்துறை ஆணையர் வழங்கினார்

கொடிய கொரோனா தொற்றின் காரணமாக கல்வி பயிலும் வகுப்பறைகள் முடங்கி தனிநபர்களாக வீட்டிலிருந்தே கல்வி கற்கும் இணையதள கல்வி அடிப்படையாக அமைந்துள்ள நிலையில், கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணிபுரிந்த வடக்கு மண்டல காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படையினரின் குழந்தைகள் பயன்பாட்டிற்காக 177 டேப்லட் மின்னணு உபகரணங்களை வழங்க பல்வேறு சமூக உதவிகள் செய்து வரும், Hyundai Motor India Foundation முன்வந்தது.

சென்னை பெருநரில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், காவல் ஆளினர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கல்வி வசதி மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தியும் வருகின்ற சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 12.1.2021 அன்று காவல் ஆணையாளர் அலுவலத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 177 வடக்கு மண்டல காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படை வீரர்களின் குழந்தைகள் பயன்பாட்டிற்காக 9 லட்சம் மதிப்புள்ள 177 டேப்லட் மின்னணு உபகரணங்களை வழங்கி வாழ்த்தினார்கள்.

டேப்லட்டை பெற்றுக்கொண்ட காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படை வீரர்களின் குழந்தைகள், காவல் ஆணையாளர் மற்றும் Hyundai Motor India Foundation நிர்வாகத்தினருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் ஏ.அருண், இணை ஆணையாளர் V.பாலகிருஷ்ணன், (வடக்கு) துணை ஆணையாளர்கள், United Way Chennai Executive Director மீனாட்சி ரமேஷ், Hyundai Motor India Foundation அமைப்பைச் சேர்ந்த ஸ்டீபன், (Senior Vice President) கார்த்திக், (South RO Zonal Head) திரு.விஜய்பாஸ்கர், (HOD, Corporate Affairs) பெர்டில்லா, (Corporate Communication) அருண், (CSV), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பள்ளி கல்லூரிகளில் பயிலும் காவல் துறையினர் குழந்தைகள் கலந்து கொண்டனர்