1984 அக்டோபர் மாதம் தொடங்கி 1985 மார்ச் மாதத்திற்கு இடையிலான 150 நாட்க்களில்
“பொன்மனச்செம்மல்” எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலும், தமிழகத்திலும் நடந்த சம்பவங்களின் தொகுப்பே இந்த ஆவணப்படம். உடல்நலம் பாதிக்கப்பட்ட எம்ஜிஆர் என்கிற மாமனிதர் நலம்பெற சாதி,மதங்களை கடந்து தமிழகமே எப்படி பிரார்த்தனை செய்தது என்பதை இந்த நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு உணர்த்துவது. தங்கள் உயிரான தலைவன் நலமுடன் திரும்புவதை காண்பதற்காக கூடிய 10 லட்சம் மக்களின் ஆர்வமும், மக்களின் ஆனந்த கண்ணீரில் மிதந்த தலைவனை பற்றியது இந்த படம். ஒரு முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவரை எப்படி மாநில அரசும் மத்திய அரசும் கவனித்து கொண்டன. தகவல் தொடர்பு,மற்றும் மருத்துவ தொழில் நுட்பம் குறைவான காலத்தில் அவரது உயிரை காப்பாற்றி கொண்டுவர வெளிப்படையாக நடந்த முயற்சிகளை விவரிக்கிறது இந்த ஆவணப்படம். மக்கள் தொடர்பு: சக்தி சரவணன்.