‘ உனது தேசத்தை பார் ’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கு தொடரை சுற்றுலாத்துறை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘புத்த தலங்களை ரயில் மூலம் சுற்றி பாரத்தல்’ என்ற இணைய கருத்தரங்கு கடந்த ஜனவரி 16ம் தேதி நடத்தப்பட்டது. இந்தியாவில் வளமான புத்த பாரம்பரியம் , நாடு முழுவதும் புத்தர் நேரில் சென்ற இடங்கள், அவரது சீடர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியம் ஆகியவை குறித்து இந்த இணைய கருத்தரங்கில் எடுத்து கூறப்பட்டன.
புத்த தலங்களில் உள்ள பயண வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த தகவல்களும் இதில் தெரிவிக்கப்பட்டன. இந்த இணைய கருத்தரங்கில், மத்திய சுற்றுலாத்துறையின் துணை தலைமை இயக்குனர் திரு அருண் ஸ்ரீவஸ்த்தவா துவக்கவுரை ஆற்றினார். புத்த தலங்கள் குறித்த விவரங்களை ஐஆர்சிடிசி இணை பொது மேலாளர் டாக்டர் அச்சியுத் சிங் விளக்கினார்.