சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அடையாறு மாவட்ட காவல் துணை ஆணையாளர் வி.விக்ரமன் தனிப்படையில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் மனோஜ், செல்வகுமார் மற்றும் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், 31.1.2021 அன்று காலை முட்டுக்காடு, சோதனைசாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே சந்தேகப்படும்படி வந்த சரக்கு வாகனங்களை நிறுத்தி காவல் குழுவினர் விசாரணை செய்தபோது, 5 வாகனங்களில் வந்த நபர்களும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். மேலும், சந்தேகம் அதிகரிக்கவே, மேற்படி சரக்கு வாகனங்களை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா மற்றும் ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பெருமளவு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 1.முத்துக்குமார், வ/25, த/பெ.கந்தசாமி, எண்.33/38, அகப்பை குளம், நாசரேத், தூத்துக்குடி மாவட்டம் 2.செல்வராஜ், வ/47, த/பெ.சித்திரைப்பாண்டி, எண்.2 அகப்பை குளம், நாசரேத், தூத்துக்குடி மாவட்டம் 3.அம்ஜித், வ/42, த/பெ.பாபுஜான், எண்.9, கண்ணபிரான் தெரு, பல்லாவரம் 4.ராஜகுருதி, வ/24, த/பெ.குண்டுமலை, அன்னை அஞ்சுகம் நகர், பழைய பெருங்களத்தூர் 5.பட்டுராஜா, வ/27,
த/பெ.கிருஷ்ணன், எண்.92, வடக்கு தெரு, புளியங்குளம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 12 டன் எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள் மற்றும் 2 கனரக சரக்கு வாகனங்கள், 3 இலகுரக சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேற்படி வழக்கில் தலைமறைவாகயுள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்கள் பெங்களூரிலிருந்து குட்கா புகையிலைப்பொருட்களை கடத்தி வந்து சென்னையில் விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.