பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெரிதாரன குற்றத்தடுப்பு பிரிவு தொடக்கம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், Operation Smile Programme தொடங்கப்பட்டு 15.02.2021 வரை செயல்படவுள்ளது. இந்நிகழ்ச்சியானது காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் துறை கூடுதல் இயக்குநர் சீமா அகர்வால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு (பொறுப்பு), லால்வீனா சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் மற்றும் காவல் துணை ஆணையாளர் H. ஜெயலட்சுமி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

சென்னை பெருநகரில் பிச்சையெடுக்கும் குழந்தைகள், பராரியாக சுற்றித்திரியும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகள், பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகள், கல்வி தேவைப்படும் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமை தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள், ஆபத்து விளைவிக்கக்கூடிய தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் போன்ற அனைத்து தரப்பட்ட குழந்தைகளை எங்கு பார்த்தாலும் அவர்களை அந்தச் சூழலிலிருந்து விடுவித்து அவர்களுக்கு தேவையான மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்து சீர்திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. Operation Smile நிகழ்ச்சியானது சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த துணை ஆணையாளர்களின் தலைமையில் ஒரு உதவி ஆணையாளர் கண்காணிப்பில் இரண்டு ஆய்வாளர்கள், குழந்தை நல காவல் அதிகாரி ஆகியோர்களுடன் மாவட்ட குழந்தைகள் நல அலகு, குழந்தைகள் நலக் குழுமம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிலாளர் துறை, Child Line, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறுவர் நல காவல் பிரிவு I மற்றும் சிறுவர் நல காவல் பிரிவு II ஆகியோர்கள் இணைந்து சென்னை பெருநகர் முழுவதும் குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக் குழுமங்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகியவை முறையே கெல்லீஸ், புனித தோமையர் மலை மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் தற்காலிகமாக OperationSmile நிகழ்ச்சிக்காக பிரத்தியேகமாக செயல்படும் குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைத்து குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அந்தந்த குழந்தைகளுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளும் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த Operation Smile நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், தொடக்கவுரை மற்றும் வாழ்த்துரை வழங்கி ஒவ்வொரு குழந்தையும் கட்டாயமாக கல்வி பயில வேண்டும் என்று வலியுறுத்தியும் அதற்கு தேவையான ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்கள், மீட்கப்படும் குழந்தைகளில் யாரேனும் ஆதவற்றிருந்தால் அந்தக் குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் மீண்டும் ஒப்படைக்க ஆவன செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எந்தக் குழந்தையையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தாமல் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதனையடுத்து, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் அவர்கள், தனது துறையின் கீழ் செயல்பட்டு வரும் DCPO, CWC மற்றும் Other stakeholders அனைவரும் ஒன்றிணைந்து Operation Smile நிகழ்ச்சியின் மூலம் மீட்கப்படும் குழந்தைகளுக்கு அரசின் நலத் திட்டங்கள் எப்பொழுதும் எந்த இடத்திலும் தொய்வின்றி கிடைக்க அனைத்து துறையினரும் ஊக்கமுடன் செயல்பட அறிவுறுத்தினார். காணாமல் போன குழந்தைகளை ஒப்பிட்டு பார்க்க Khoya-Paya Portal & CCTNS மூலம் அடையாளம் காணப்படும் எனவும் இதுவரை 10 ஆண்டுகளில் 8112 காணாமல்
போன குழந்தைகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 7994 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 15 நாட்களில் 17 காணாமல் போன குழந்தைகள் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கடந்த 1 1/2 ஆண்டுகளில் தொழிலாளர் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினருடன் இணைந்து 80 கொத்தடிமைக் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 50 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சிறுவர் நல காவல் பிரிவு 1 மற்றும் 2 –ன் மூலம் பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் 2000 குழந்தைகள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகளை மீட்டு அவர்களின் சீர்திருத்திற்காகவும் கல்வியைத் தொடரவும் மறுவாழ்விற்கும் வழிவகை செய்யப்பட்டதாகவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும் இந்த Operation Smile நிகழ்ச்சியினை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் காவல் துணை ஆணையாளர் சென்னை பெருநகரம் முழுவதும் Nodal Officer-ஆக இருந்து கண்காணித்து மீட்கப்படும் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க உறுதியெடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவிழ்ந்து நிகழ்ச்சி இனிதே நினைவுற்றது.