தோழி திட்ட பயிற்சி முகாமை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் 03.02.2021 அன்று காலை காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் தோழி திட்ட பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், தோழிகளுக்கான பயிற்சி முகாமை குத்துவிளக்கேற்றி, உங்களுக்காக நாங்கள் என்ற சுவரொட்டியை திறந்து வைத்தும் சிறப்பு விருந்தினர்களுக்கு சுவரொட்டிகளை பிர சுரித்தும் விழாப்பேருரையாற்றினார். அவரது உரையில் இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான நகரம் சென்னை என்றும் பாலியல் துன்புறுத்துதல் குற்றங் களில் ஈடுபடுபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்டனைகள் பெற்றுத் தருவது மட்டுமே காவல் துறை யினரின் நோக்கம் அல்ல, மனித நேயத்துடன் கூடிய காவல் பணியே சென்னை பெருநகர காவல் துறையின் முக்கிய நோக்கம் என்றும் இதில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலுள்ள தோழிகள் பாலியல் துன்புறுத்தலால் குழந்தைகள் மீது பதிக்கப்படும் சமுதாய முத்திரையை களைந்து அவர்களை எவ்வாறு அணுகுவது? அவர்களுக்கு தைரியம் கொடுப்பது, கல்விக்கான உதவிகளைச் செய்வது மேலும் என்னென்ன தேவைகள் என்பதையறிந்து அனைத்து தேவைகளையும் நிறைவு செய்ய முழுமூச்சுடன் செயல்பட்டு வருவதாகவும் பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு விபத்து, “அதை முறியடிப்பதே தோழி திட்டத்தின் முக்கியமான குறிக்கோள்” எனவும் ஒவ்வொருவரும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே Whatsapp காணொலி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு புகார்களை அளித்து பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோழி திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதால் தோழி திட்டத்தின் மூலம் தோழிகள் குழந்தைகளின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுவித்து நற்சூழலை ஏற்படுத்தியதில் தோழிகளின் பங்கு மெச்சத் தகுந்தது. மேலும் POCSO சட்டத்தில் கடுமையான தண்டனைகள் இருந்தாலும் கூட அதையும் தாண்டி சட்ட ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தோழிகள் குழந்தைகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளைச் செய்து சமுதாயப் பணியாற்றி வருகின்றனர். உளவியல் ரீதியான நம்பிக்கைகளை பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமென்றும் இதுவரை 400 குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப் பட்டுள்ளது திருப்தியளிப்பதாகவும் அனைத்து தோழிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து தோழிகள் அனைவரும், பாதிக்கப்பட்ட குழந்தை அந்தச் சூழலிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்நிகழ்ச்சியின் குறும்படத்தில் காண்பிக்கப்பட்டது போன்ற மகிழ்ச்சியான நிலைக்கு திரும்புவதற்கு முக்கிய காரணமாக உள்ள தோழிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

சென்னை பெருநகர தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர் முனைவர் R.தினகரன் இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரை வழங்கி பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் தொந்தரவுகள் குழந்தைகளின் எதிர்காலத்தையே மாற்றி விடுவதாலும் பெற்றோர்கள் இந்த சம்பவத்தை வெளியே சொல்ல அச்சப்படுவதாலும் தோழிகள் அவர்களை அணுகி குழந்தைகளைப் பற்றிய எவ்வித அடையாளங்களையும் வெளியிடாமல் அரவணைப்புடன் ஆதரவுடனும் செயல்பட்டு அமைதிப்புரட்சியை (Silent revolution) ஏற்படுத்தி வருவதாகவும் மேலும் தோழிகளை ஊக்குவிப்பதற்காக ஆணையாளர் அவர்கள் புத்தாக்கப் பயிற்சியை ஏற்படுத்தியும். மேலும் காவல் ஆளினர்களை வைத்து குழந்தைகளுக்கான விழிப்புணர்வு குறும்படம் தயார் செய்து வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்.ஆண்ட்ரூ சேசுராஜ், Dr.ஜெயக்குமார், வழக்குரைஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி மற்றும் திரைப்பட நடிகர் தாமு ஆகியோர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் தோழிகளுக்கு (காவல் ஆளினர்களுக்கு) சிறப்பான புத்தாக்கப் பயிற்சியளித்தனர். இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்காக தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவின் காவல் துணை ஆணையாளருக்கும் காவல் ஆணையாளர் பாராட்டுக்களை தெரிவித்தார்.