கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பு குறித்து மத்திய குழு அலுவலர்கள் நேரில் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சாh;ந்த 4 பேர் கொண்ட மத்திய ஆய்வுக் குழு அலுவலர்கள் பல்வேறு கிராமங்களுக்கு 05.02.2021 அன்று நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்கள். தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்தன. இராமநாதபுரம் மாவட்டத்தின் ஜனவரி மாத சராசரி மழையளவு 48.50 மி.மீ ஆகும். நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில்; மட்டும் 248.74 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மாண்புமிகு தமிழநாடு முதலமைச்சர் உத்தரவின்படி விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் உரிய நிவாரணம் வழங்க ஏதுவாக ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக கிராமங்களில் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் விரிவான கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்;படி மாவட்டத்தில் 79210 ஹெக்டர் நெற்பயிர்களும் 4059 ஹெக்டர் சிறுதானிய பயிர்களும் 3030 ஹெக்டர் பயிறு வகைகளும் 1297 எண்ணெய் வித்து பயிர்களும் என மொத்தம் 87596 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பல்வேறு பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்திட மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 4 பேர் கொண்ட மத்திய ஆய்வு குழு வருகை தந்துள்ளனர். இக்குழுவில் மத்திய அரசின் மூலம் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் அசுடோஷ் அக்னிஹோத்ரி மத்திய வேளாண்மை துறை அமைச்சக இயக்குநர் டாக்டர் மனோகரன் மத்திய நிதித்துறை துணை இயக்குநர் மகேஷ் குமார்
மத்திய ஊரக வளா;ச்சித்துறையை சார்ந்த சின்னசாமி ஆகியோர் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் குயவன்குடி மற்றும் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் கழுகூரணி கிராமங்களில் பாதிப்படைந்துள்ள நெற் பயிர்களையும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ஆலங்குளம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் தாளியரேந்தல் கிராமங்களில் பாதிப்படைந்துள்ள மிளகாய் பயிh;களையும் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருங்குடி மற்றும் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் கற்காத்தகுடி கிராமங்களில் பாதிப்படைந்துள்ள நெற் பயிர்களையும் ஆய்வு செய்து பயிர் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையாளர் டி.ஜெகந்நாதன் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வின்போது இராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.எஸ்.சேக்அப்துல்லா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பெ.தனுஷ்கோடி உட்பட வேளாண் மற்றும் வருவாய்த்துறை சாh;ந்த அலுவலா;கள் கலந்து கொண்டனர்.