முதல்வருடன் சந்திப்பு

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன்களை ரத்து செய்வதாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமி அறிவித்ததையொட்டி, அவரது இல்லத்தில் (6.2.2021 – வெள்ளிக் கிழமை), அமைச்சர் பாஸ்கரன் தலைமையில், சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் நேரில் சந்தித்து, தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும், சிவகங்கை ஒன்றியம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இலுப்பக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் சதாசிவம் அக்கட்சியில் இருந்து விலகி, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.