சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச்
சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மேற்படி குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து ரகசியமாக கண்காணித்து விபச்சார தரகர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக R-8 வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமை யிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 23.12.2021 அன்று சூளைமேடு, பெரியார்பாதையில் உள்ள ஒரு ஆயுர்வேத ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரை கண்காணித்த போது அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் மேற்படி மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி வந்த ராஜாசிங், வ/23, த/பெ.சுந்தர்சிங், எண்.5, M-பிளாக், தாய்ஷா அப்பார்ட்மெண்ட், விருகம் பாக்கம் என்பவரை கைது செய்தனர். மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப் பட்ட ராஜாசிங் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 3 பெண்களும் மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.