திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு தனி நபர் அரசுக்கு சொந்தமான நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் ஊர் மக்களின் பொது நடைபாதை யைத் தடுத்து பெரும் இடையூறு செய்து வருகிறார். இந்த சட்ட விரோதச் செயலுக்கு எதிராக ஊர் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டத் துணைச் செயலாளரும், கும்மிடிப் பூண்டி ஒன்றியச் செயலாளருமான ஜெ. அருள் பங்கேற்று வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடந்த ஒரு போராட் டத்தில் கலந்து கொண்ட ஜெ. அருள் உட்பட 26 பேர் மீது காவல் துறையினர் கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து ஜெ. அருளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரை சட்டரீதியான முறையில் பிணையில் எடுக்க முயற்சிக் கும் போது, காவல்துறையினர் அவரை “நக்சலைட்“ என்று அடையாளப்படுத்தி, அவரது பிணை விடுதலை மனுவை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அவரை நீண்ட கால சிறைவாசத்தில் வைத்து, பழிவாங்கும் செயலில்ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்து, பொதுச்சொத்துக்களை அபகரித்து, ஆதிக்கம் செலுத்தும் நபர்களை காப்பற்றும் முயற்சியில் ஈடுபடும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையின் சட்ட அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அருள் உட்பட போராடியவர்கள் மீதான வழக்கை நிபந்தனையின்றி திரும்பப் பெற்று, அனை வரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி போராட் டத்தை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு இரா.முத்தரசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.