சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து
வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, வண்ணாரப்பேட்டை உதவி ஆணையாளர் ஜுலியஸ் சீசர் மேற்பார்வையில், ஆர்.கே.நகர் காவல் ஆய்வாளர் மகாவிஷ்ணு தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை கொண்ட தனிப்படையினர் 04.3.2021 அன்று மாலை கொருக்குப்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலை, ஐ.ஓ.சி. ரயில்வே கேட் அருகே கண்காணித்த போது, அவ்வழியே வந்த 2 ஆட்டோக்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, ஆட்டோக்களில் வந்த 6 நபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், 2 ஆட்டோக் களையும் சோதனை செய்தபோது, அதில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், ஆட்டோக்களில் கஞ்சா கடத்தி வந்த 1.ராஜாமுகமது, வ/26, த/பெ.சையது புகாரி, 2.யாசர் அராபத், வ/28, த/பெ.சையது இப்ராகிம், 3.சரவணன், வ/31,
த/பெ.மணி, 4.முகமது ரியாஸ், வ/23, த/பெ.அப்துல் காதர், 5.ஜெய்னூலாபுதின், வ/20, த/பெ.சாதிக் பாஷா, 6.சஞ்சய், வ/19, த/பெ.வடிவேலு, ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 76 கிலோ எடை கொண்ட கஞ்சா, 2 ஆட்டோக்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி சம்பவங்களில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்தும், குற்றவாளிக்கு நீதிமன்ற தண்டனை பெற்று தந்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 05.3.2021 அன்று நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.