நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழகத்தில் 1 (ஒன்று) சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின் போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் உ. கண்ணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் சத்திரியன் வேணுகோபால் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச் செயலாளர்கள் க.பொன்முடி, எம்.எல்.ஏ., ஆ.இராசா,எம்.பி., கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.