கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், முக்கிய இடங்களிலும் காவல் குழுவினர் மூலம் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 17.3.2021 அன்று மாலை, அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகில் சென்னை பெருநகர காவல் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் கொரேனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டியதின் முக்கியத்துவம் குறித்தும், திரவ சுத்திகரிப்பான் மற்றும் சோப்புகளை கொண்டு அடிக்கடி கைகளை கழுவவும், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கவும் வலியுறுத்தினார். மேலும், அவ்வழியே முகக்கவசம் அணியாமல் சென்ற பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை அருகில் உள்ள காவல்துறை கொரேனா விழிப்புணர்வு முகாமில், காவல் ஆணையாளர் கொரோனா தொற்று பரவல் தடுப்பது குறித்து அறிவுரைகள் வழங்கி, இலவசமாக முகக்கவசங்களை வழங்கினார்.

தொடர்ந்து, இராயப்பேட்டை, எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில், காவல் ஆணை யாளர் சென்று அங்கு பாதுகாப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு முகக்கவசம் அணி யாமல் வரும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவல் குறித்து அறிவுரைகள் வழங்கி, முகக்கவசங்கள் வழங்கியும், கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு தல்கள், பின்பற்றப்படுவதின் அவசியத்தை வணிகர்கள் மற்றும் வணிக நிர்வாக அதிகாரிகளுக்கு தெரிவித்தும், சென்னை பெருநகரில் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் இணைந்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.. இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையாளர்கள் மருத்துவர் என்.கண்ணன்,. (தெற்கு), கே.பவானீஸ்வரி,, (போக்குவரத்து), இணை ஆணையாளர்கள் வி.பாலகிருஷ்ணன் (கிழக்கு மண்டலம்), பி.கே.செந்தில்குமாரி, (போக்குவரத்து /தெற்கு), துணை ஆணையாளர்கள் பி.பகலவன், (திருவல்லிக்கேணி), மருத்துவர் கே.பாலகிருஷ்ணன் (போக்குவரத்து/கிழக்கு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.