கொரோனா தொற்று ஆளிநர்களுக்கு ஆணையர் அறிவுரை

25.3.2021 காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் முன்கள பணியாளர்களான சென்னை பெருநகர காவல் துறை ஆயுதப்படை பெண் காவலர்கள், காவல் கட்டுப்பாட்டறை அதிகாரிகள் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிகாரிகளுடன் காவல்துறையினரை சந்தித்து விழிப்புணர்வு சார்ந்து விவரங்கள் பகிர்ந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் அவசியத்தை கூறி உற்சாகப்படுத்தி மருத்துவர் மற்றும் செவிலியர்களை சந்தித்து கொரோனா தடுப்பு சார்ந்த நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து காவல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வில் இணை ஆணையர் லெட்சுமி, (தெற்கு மண்டலம்) துணை ஆணையர்கள் முனைவர் P.சாமிநாதன், (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை) P.பகலவன், (திருவல்லிக்கேணி) K.சௌந்தராஜன் (ஆயுதப்படை), தலைமை மருத்துவர் (பொறுப்பு) டாக்டர்.B.சுந்தர்ராஜ், மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.