H-5 New W.pet PS- 307 IPC- 4 arrested

புதுவண்ணாரப்பேட்டை, சுனாமிகுடியிருப்பு, E-பிளாக், எண்.328 என்ற முகவரியில் ஜீவா, வ/21, த/பெ.மாரி என்பவர் வசித்து வருகிறார். ஜீவா நேற்று இரவு 11.00 மணியளவில் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஜீவாவிற்கு ஏற் கனவே அறிமுகமான 4 நபர்கள் , ஜீவாவிடம் அவரது மைத்துனரான சொலிசன் விக்கி எங்கே என்று கேட்டு 4 நபர்களும் தகராறு செய்துள்ளனர்,  உடனே ஜீவா என க்கு தெரியாது என கூறியுள்ளார். மேலும் என்னிடம் கேட்டு ஏன் தகராறு செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேற்படி 4 நபர்களும் ஜீவாவை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி யுள்ளனர். இரத்த காயமடைந்த ஜீவா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார். இது குறித்து ஜீவாவின் மனைவி குப்புலட்சுமி என்பவர் H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய த்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து
விசாரணை செய்யப்பட்டது. H-5 புதுவண்ணாரப் பேட்டை  காவல் நிலைய ஆய்வாளர் தலைமை யிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.முரளி (எ) பாம் முரளி, வ/20, த/பெ.பாஸ்கர், எண்.29, வ.உசி. நகர், 7 வது தெரு, தண்டையார்பேட்டை 2.அஜய் (எ) பம்ப் அஜய், வ/22, த/பெ.சுரேஷ் மூர்த்தி, எண்.11, 523 வது பிளாக், 13 வது தெரு, மணலி 3.நரேஷ்குமார், வ/21,த/ .நாகூரான், எண்.477, ஜி-பிளாக், சுனாமி குடியிருப்பு, தண்டையார்பேட்டை 4.சஞ்சய், வ/21, த/பெ.நாகராஜ், எண்.80/82, அம்மனி அம்மன் தோட்டம் தண்டையார்பேட்டை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் தாக்கு தலுக்குள்ளான ஜீவாவின், மைத்துனர் சொலி சன் விக்கிக்கும் மேற்படி குற்றவாளி முரளி (எ) பாம் முரளிக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்து ள்ளது. இதன் காரணமாக சம்பவத்தன்று முரளி (எ) பாம் முரளி தனது நண்பர்களுடன் சேர்ந்து சொலி சன் விக்கியை தாக்குவதற்கு வந்துள்ளதும், சொலிசன் விக்கி சிக்காததால், அவரது மைத்துனர் ஜீவாவிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கியுள்ளது தெரிய வந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட முரளி (எ) பாம் முரளி மீது 6 வழக்கு களும், அஜய் (எ) பம்ப் அஜய் மீது 7 வழக்குகளும், நரேஷ்குமார் என்பவர் மீது 5 வழக்குகளும், சஞ்சய் என்பவர் மீது 2 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.
விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட 4 குற்ற வாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள் ளனர்.