ஆர்.கே நகர் பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவ டிக்கை quot; (Driveagainst Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர் களையும், விற்ப னை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்ட தின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்  தொடர்ச்சியாக, H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய் வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நேற்று மாலை, கொரு குப்பேட்டை, மணலிசாலை, சுண்ணாம்புகால் வாய் அருகில் கண்காணித்த போது, அங்கு சந்தேகத் திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். மேலும் அவரை சோதனை செய்ததில் மெத்த கெட்ட மைன் என்ற போதை பொருளை வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில் சட்டவிரோதமாக போதைபொருளை விற்பனைக்காக வைத்திருந்த சந்தோஷ்குமார், வ/23, த/பெ.அமரேந்திரன், எண்.31/44, நேரு தெரு, மூப்பனார் நகர், கொருக்குப்பேட்டை என்ப வரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 30 ஆயி ரம் மதிப்புள்ள 10 கிராம் மெத்த கெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளி சந்தோஷ்குமார் நீதிம ன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.