டைரக்டர் வெற்றி மாறன், சூரியை ஹீரோவாக வைத் து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கிடையில் 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அசுரன் படத்திற்காக சிறந்த டைரக்டருக்கான விருது வெற்றிமாறனுக்கு கிடைத்தது. சிறந்த தமிழ் படத்திற் கான விருதினையும் அசுரன் படம் பெற்றது. இந்த படத்தின் ஹீரோவான தனுஷூக்கு சிறந்த நடிகரு க்கான விருது கிடைத்தது. பல படங்களை கையில் வைத்திருப்பதால் பயங்கர பிஸியான டைரக்டர் ஆகி விட்டார் வெற்றி மாறன். சூரியை வைத்து வெற்றி மாறன் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன் றில் விஜய் சேதுபதி நடிக்கிறாராம். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.