ஆதார் எண்ணை காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகளை மத்திய அரசு ரத்து செய்தது கொடூரமானது

ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவை கொண்டு சேர்ப் பதும் அதை உறுதிப்படுத்துவதும் அரசின் கடமை யாகும்! – எஸ்.டி.பி.ஐ. தேசிய செயற்குழு. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் ஏப்ரல் 10 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சி யின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி தலைமை தாங்கினார். மேலும், தேசிய துணைத் தலை வர் வழ.ஷர்புதீன் அகமது, தேசிய பொதுச் செயலா ளர்கள் அப்துல் மஜீத், இலியாஸ் முஹம்மது தும்பே, தேசிய செயலாளர்கள் சீதாராம் கொய்வால், டாக்டர் மெஹபூப் ஷரீஃப் ஆவாத், யாஸ்மின் ஃபாரூகி மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் நாட்டின் சமூக, அரசியல் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறி த்து விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

தீர்மானம் 1:

3 கோடி ரேஷன் அட்டைகளை மத்திய அரசு ரத்து செய்தது கொடூரமானது  ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்ற காரணத்திற்காக நாடு முழுவதும் உள்ள 3 கோடி ரேஷன் அட்டைகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கையால் ஏழை மக்களின் நிலை என்னவாகும் என்ற கலக்கம் உண்டாகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் மத்திய பாஜக அரசு நாட்டில் உள்ள ஏழை மற்றும் கூலித்தொழிலாளர்கள் வாழ்க்கையை மிகவும் கடுமையாகவும், இழப்புகள் நிறைந்ததாகவும் உருவாக்குகிறது. ஏற்கனவே நாட்டில் மோசமான ஆட்சி நடைபெறுவதால் மக்கள் ஆதரவற்றவர்களாக கைவிடப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இது மாதி ரியான அறிவுக்கு ஒப்பில்லாத செயல்கள் மூலம் மக்களின் வாழ்க்கை மேலும் துயரமாகிறது.  ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கான உணவை மறுப்பதற்கு மத்திய அரசு சொல்லும் காரண மெல்லாம் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடி யாதது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக னுக்கும் உணவை கொண்டு சேர்ப்பதும், அதை உறுதிப் படுத்து வதும் அந்த நாட்டை ஆளும் அரசின் கடமையாகும். இதற்காக மனித வளங்களை பயன்படுத்தி கடைகோடி குடிமகனுக்கும் உணவு சென்று சேர்க்க அரசு நடவடி க்கை எடுக்க வேண்டும். ஆனால், தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை இதற்கு முற்றிலும் மாற்றமானது. 3 கோடி ரேஷன் அட்டையை ரத்து செய்த நடவடிக்கையை எந்த தாமதமின்றி உடனே மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2:

கியான்வாபி மஸ்ஜித் இடத்தில் குழப்பம் ஏற்படுத்தும் சதித்திட்டம் – நாட்டில் பேரழிவு மற்றும் அமைதி யின்மைக்கு வழிவகுக்கும் மதவாத குழுக்கள் தங்க ளுடைய அரசியல் ஆதாயத்திற்காக வழிபாட்டு இட ங்களில் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்புகின்றனர். இதன் விளைவாக நாட்டின் அமைதி மற்றும் நல்லி ணக்கத்திற்கு கேடு விளைகிறது. கியான்வாபி மஸ்ஜித் மீது திணிக்கப்படும் சர்ச்சைகள் தான் இதற்கான சமீப த்திய உதாரணம். பாசிச மதவாத சக்திகள் அயோத்தி பிரச்சனை போன்று கியான்வாபி மஸ்ஜித் இடத்திலும் சர்ச்சையை உண்டாக்குகின்றன. இதன் மூலம் பெரும் பான்மையினர் மத உணர்வை தூண்டி அதன் மூலம் தேர்தல் வெற்றிகளை பெற முயற்சி செய்கிறது. பாசிச சக்திகள் மத்திய பாஜக அரசின் நிர்வாக தோல்வியை மறைக்க நாட்டின் பெரும்பான்மை மக்களின் சிந்த னையை இதுபோன்ற மத விவகாரங்களில் திசை திரு ப்பி விடுகின்றனர். வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு சட் டம் விதிகள்) 1991, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று  நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்கள் எப்படி இரு ந்ததோ அது அப்படியே இருக்க வேண்டும் என்றும், அதில் மற்றொரு பிரிவினர் எந்த உருமாற்றமும் செய்யவும் தடை விதித்துள்ளது. மேலும், இந்த சட்டத் தின்படி 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று வழி பாட்டுத் தலங்கள் தொடர்பாக நீதிமன்றம் மற்றும் அதிகார மையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் முறையீடுகள் அனைத்தும் கைவிடப் படுகிறது. ஆகையால் நாட்டில் உள்ள எந்த வழி பாட்டுத் தலங்களிலும் யாரும் தலையிட உரிமை கிடையாது என்று வழிபாட்டு இடங்கள் மீதான உரி மைகள் பற்றிய விளக்கங்கள் மிக தெளிவாக கூறப் பட்டுள்ளது. ஆனால் ஆதாரமற்ற அல்லது சட்டத்திற்கு புறம்பான வழியில் கியான்வாபி மஸ்ஜித் மீதான சர்ச் சைகளை மதவாத சக்திகள் உண்டாக்குகின்றனர். இந்த மோசமான சதித்திட்டம் நாட்டில் பேரழிவு மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும். இது நாட்டின் கண் ணியத்திற்கும் மற்றும் மதிப்பிற்கும் தீங்கு விளைவிக் கும்.  எஸ்டிபிஐ கட்சி மதவாத சக்திகளின் இந்த செய லுக்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறது. மேலும் கியான்வாபி மஸ்ஜிதிற்கு நீதி வேண்டி நடக் கும் சட்ட போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. தேவைப்பட்டால் சட்ட போராட்டத்தையும் நடத்த எஸ்டிபிஐ கட்சி தயாராக உள்ளது.

தீர்மானம் 3:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) புறக்கணித்துவிட்டு வாக்கு சீட்டு முறையை கொண்டுவர வேண்டும்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான வெளிப்படைத்தன்மை, நம்பகத் தன்மை குறித்து புகார்கள் எழுவது நாட்டின் ஜன நாயகத்தன்மை மீதான கவலையை உண்டாக்குகிறது. குறிப்பாக இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரத்தை தொழில்நுட்ப யுக்திகளை கொண்டு வெளிநபர்கள் கட்டுப்படுத்த முடியும் என்ற சந்தேகத்திற்கு இன்று வரை இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கத்தை கொடுக்கவில்லை. இதுதான் இந்திய தேர்தல் முறை யின் மீதான சந்தேகங்களையும், அச்சத்தையும் உண் டாக்குகிறது.  இவிஎம், விவிபேட் இயந்திரம் மீதான ஏதேனும் புகார்கள் வந்தால் தேர்தல் ஆணையம் அந்த புகார் மீது விசாரணை செய்ய தொழில்நுட்ப நிபுணர் கள் குழுவுக்கு அனுப்புகிறது. அந்த குழு விசாரணை செய்து தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பே தேர்தல் ஆணையம் இயந்திரத்தை யாரும் ஹேக் செய்ய முடியாது என்றும், இயந்திரம் மீதான கூடுதல் விசாரணை தேவையில்லை என்று அந்த புகாரை முடித்து விடுகிறது. இறுதியில் தொழில்நுட்ப நிபுண ர்கள் குழுவின் அறிக்கை என்னவாச்சு என்று தெரியா மல் போய்விடுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உண்மைத் தன்மை, துல்லியத்தன்மை ஆகியவற்றை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஆதாரத்தின் அடிப்ப டையில் நிரூபிக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை வைக்கிறது. இந்திய தேர்தலை பொறுத்த வரை பணமும், மத உணர்வுகளை தூண்டும் அரசியல் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது கசப் பான உண்மை. சாதியவாதம், மதவாதம், பொய் வாக்கு றுதிகள் ஆகியவற்றோடு பெரும் பணப்புழக்கம், கட்ட ற்ற அதிகாரமும் ஒன்று சேர்ந்து நாட்டின் ஜன நாயகத்தின் ஆன்மாவை இழிவுப்படுகிறது. இந்த மிகப்பெரிய பிரச்சனையை இந்தியாவின் சட்டமேற் றும் மன்றங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு தேர் தல் சீர்திருத்தம் செய்திட எஸ்டிபிஐ வலியுறுத்து கிறது.

தீர்மானம் எண் 4 :

மத்திய அரசு, தேசத்தின் அமைதி மற்றும் ஒருமை ப்பாட்டைப் பாதுகாத்திடவேண்டும்: நமது நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் மதசார்பின்மை, மதவெறு ப்பையும், வன்முறையையும் நோக்கமாகக் கொண்டு மக்களிடையே, மதங்களிடையே வெறுப்பையும், அராஜகத்தையும், பிளவையும் அதிவேகமாகப் பரப்பும் அழிவுச் சக்திகளால் ஆபத்திற்கு ஆளாகியுள்ளது. இத்தகைய அழிவுச் சக்திகளை ஒடுக்குவதில் இந்திய அரசு தன் பொறுப்பை உணர்ந்து பாகுபாடற்ற நடவடி க்கைகள் எடுத்து செயல்படவேண்டும்.  வடகிழக்கு டெல்லி கலவரங்களைத் தூண்டிவிட்டவர்கள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்காதது மக்களின் மனங் களை இன்றுவரை நெருடிக்கொண்டுள்ளது. டெல்லி கலவரங்களைத் தூண்டக் காரணமாக இருந்து தாக்கு தல்களை வழிநடத்திய முக்கியக் குற்றவாளிகளில் பாஜக அரசியல்வாதி கபில் சர்மா, மத்திய நிதி இணை யமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக முன்னணித் தலை வர்களான பரவேஷ் வர்மா, அபவ் வர்மா, பாஜக எம்.பி. சத்யபால் சிங், பாஜக எம்.எல்.ஏக்கள் நன்த்கிஷோர் குஜ்ஜார், மோகன் சிங் பீஷ்த், ஜகதீஷ் பிரதான் ஆகி யோர் அடங்குவர். இவர்கள் மீது எழுத்துப்பூர்வமான புகார்கள் அளித்தும் இந்தக் குற்றவாளிகளின் மீது முதல் தகவலறிக்கைக் கூட டெல்லி காவல்துறை இதுவரை பதியவில்லை. இத்தகைய வன்முறையைத் தூண்டும் தொடர் வெறுப்புப் பேச்சுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அத்தகைய அபாயகரமான மதவெறுப்புணர்வுச் சக்திகளின் அழிச்சாட்டியங்க ளுக்கு அரசு அமைதிக் காப்பதோடு, அவர்களுக்கு ஆத ரவும் பாதுகாப்பு அளிப்பதாக விளங்குவது போன் றுதான் யாதி நரசிங்கானந்த் என்பவரின் சமீபத்திய நிரு பர்கள் கூட்டத்தில் வெளிப்படையாகக் கக்கிய விஷமப் பேச்சு உள்ளது என்பது கண்கூடு. இத்தகைய மத வெறு ப்பைப் பரப்பும் அபாயகரமான சக்திகளை அரசு ஒடுக் கத் தவறினால் தேசத்தின் அமைதியும், ஒருமை ப்பாடும் பேரழிவுக்கு உள்ளாகும் என்று மத்திய அரசை எஸ்.டி.பி.ஐ. கட்சி எச்சரிக்கிறது.

தீர்மானம் எண் 5 :

ரோஹிங்கியா அகதிகளின் நலன் பாதுகாக்கப்பட வேண் டும்: பாவப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மீதான துன்புறுத்தல், தாக்குதல்கள், அவமானப் படுத்தல் சம்மந்தமான வேதனைமிக்க சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தேசமெங்குமிருந்து வரு கின்றன. மர்மமான நபர்களால் அவர்களின் குடியிரு ப்புகள் தீயிட்டுப் பொசுக்கப்பட்டு அவர்கள் பயம் மற் றும் பாதுகாப்பற்ற சூழலில் நாட்களைக் கடத்து கின் றனர். ரோஹிங்கியா அகதிகளைக் கண்டறிந்து அவர் களுக்கு பாதுகாப்புடன் அடையாள அட்டைகள் வழ ங்கிட வேண்டும் என்று ஐ.நா.சபை தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக அடையாள அட்டைகள் வைத்திருக்கும் ரோஹிங்கியா அகதி களை அழிக்கும் நோக்கத்துடன் குறிவைத்துத் தாக்கப் படுவது வழக்கமாகிவிட்டது. ஐ.நா.சபையின் தீர்மா னத்தை மதித்து ரோஹிங்கியா அகதிகளின் நல ன்களை அரசு பாதுகாத்திட வேண்டும் என்பதை எஸ். டி.பி.ஐ. கட்சி நினைவூட்டுகிறது. 

ஏ.கே.கரீம்
ஒருங்கிணைப்பாளர்
SDPI கட்சி