பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டால், தொற்று பரவலை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர முடியும்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகின்றது. தினசரி தொற்று இரண்டு லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், கொரோனா வைரஸ் நோய் தொற்றாமல் பாதுகாத்துக் கொள்ள முன் எச்சரிக்கை நடவடி க்கைகளைக் கடைபிடிப்பதோடு தடுப்பூசியையும் போட்டுக் கொள்வது நல்லது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்களிடம் தயக்கமும் தவறான நம்பிக்கைகளும் நிலவுகின்றன. அவற்றைப் போக்கும் விதத்தில் தடுப்பூசி திருவிழா கடைபிடி க்கப்படுகின்றது.  அதன் ஒரு பகுதியாக இன்று முதல் வரும் 16-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தீவிரமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள, பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அண்மையில் விடுத்த அறைகூவலின் அடிப்படையில் கொரானா தடுப்பூசி திருவிழாவை தமிழக அரசு இன்று துவங்கியுள்ளது . கொரோனா தடுப்பூசி திருவிழாவை இன்று முதல் (ஏப்.14) வரும் 16-ஆம் தேதி வரை தமிழக அரசு மாநிலம் முழுவதும் நடத்துகிறது. இதனிடையே மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், யுனிசெப், தமிழக அர சின் பொது சுகாதார & நோய்த்தடுப்பு மருந்து இயக்ககம் ஆகியவை இணைந்து இந்த கொரோனா தடுப்பூசி திருவிழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.  அதாவது கொரோ னாவில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, தடுப்பூசியை நாம் ஏன் போட்டுக்கொள்ள வேண்டும் போன்றவை குறித்து ஜிங்கில்ஸை (ஒலி வடிவிலான விழிப்புணர்வு விளம்பரங்கள் ) ஆட்டோ- வேன் களில் கட்டப்பட்ட ஒலி பெருக்கி மூலமும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களையும் மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்தும், ஆடல் – பாடல் குழுவின் கலை நிகழ்ச்சிகள் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.  இந்த விழிப்பு ணர்வு சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், தருமபுரி, வேலூர், ராமநாதபுரம், ஆகிய இடங்களில் அமைந்துள்ள மக்கள் தொடர்பு கள அலுவலகங்கள் மூலம் மேற்கொள் ளப்படுகிறது.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்கக வளாகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஜெ.ராதாகிருஷ்ணன் விழிப்புணர்வு ஆட்டோ வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் தி.ச.செல்வவிநாயகம், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம். அண்ணாதுரை,யூனிசெப் அமைப்பின் தமிழகம் , கேரளாவின் அலுவலர் சுகதா ராய், மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் ஜெ.காமராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.  மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் கொரானா தடுப்பூசி திருவிழா தொடர்பான ஒலிபெருக்கி விழிப்புணர்வு ஆட்டோ வாகனங்கள் ஒலிபெருக்கி மூலம் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும்.சென்னையின் 15 மண்டலங்களில் நான்கு வேன்கள் மூலமும்,கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சுமார் இருபது தமிழக நகரங்களில் ஆட்டோ மூலமும் இன்று இந்த தீவிர பிரச்சாரம் துவங்கியுள்ளது.  இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதன்மைச் செயலாளர் திரு ராதாகிருஷ்ணன், கொரோனாவால் வரும் இரண்டு வாரங்கள் சவாலான நாட்களாக பார்க்கப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுவருகிறது.  45 வயதிற்கு மேல் உள்ள 2.2 கோடி நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகனத்தின் மூலம் பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரங்களை கொண்டு விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது. மத்திய மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், யுனிசெப் உதவியுடன், தமிழகம் முழுவதும் 18 வாகனங்களும் சென்னையில் 4 வாகனங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் சமுதாய தடுப்பூசி போட்டுக் கொண்டு பொது இடங்களில் முடிந்த அளவுக்கு கூட்டமாக கூடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை வீட்டில் இருந்து பணி செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 20 வகையான கூட்டு நோயுள்ளவர்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.  தமிழகம் முழுவதும் 54.85 லட்சம் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதில் 47.03லட்சம் கோவிசீல்ட் தடுப்பூசி மருந்து 7.82 லட்சம் கோவேக்சின் தடுப்பூசி மருந்து பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 40,99, 330 தடுப்பு ஊசிகள் இன்றைய தேதிவரை செலுத்தப்பட்டுள்ளது.