செம்பியம் காவலர் குடியிருப்பு வளாகத்தில், புளியந்தோப்புகாவல் மாவட்டம் சார்பில் நடைபெற்ற
கொரேனாவிழிப்புணர்வு முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப.,அவர்கள் துவக்கி வைத்து சிறப் புரையாற்றினார். பின்னர்கொரோனா தொற்று ஏற்படா மல் தடுக்க மேற்கொள்ளவேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளானமுகக்கவசம் அணிதல், திரவ சுத்திகரிப்பான் கொண்டுஅடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், வெளியிடங்களில்சமூக இடைவெளி கடைபிடித்தல், ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும், கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தினார். மேலும், பெருநகர சென்னை மாநக ராட்சி சார்பில், மருத்துவர் திருமதி.ஆஷாலதா தலை மையில் மருத்துவகுழுவினருடன் அமைக்கப் பட்டிருந்த தடுப்பூசி சிறப்புமுகாமினை துவக்கி வைத்து, காவல் ஆளிநர்கள் மற்றும்அவர்தம் குடும் பத்தினர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை பார்வை யிட்டார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல்ஆணையாளர் (வடக்கு) திரு.டி.செந் தில்குமார்,இ.கா.ப., மேற்கு மண்டல இணை
ஆணையாளர்திருமதி.எஸ்.ராஜேஸ்வரி,இ.கா.ப., புளியந்தோப்பு காவல் துணை ஆணையாளர் திரு.எஸ்.ராஜேஷ் கண்ணா, இ.கா.ப.,காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.