சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்திட, சென்னை பெருநகரகாவல் அனை த்து சரகங்களிலும், காவல் அதிகாரிகள் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 22.4.2021 காலை, அமைந்தகரை, அண்ணா ஆர்ச்அருகே சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, கொரோனா விழிப்புணர்வு முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார்அகர்வால், இ.கா.ப. அவர்கள் கலந்து கொண்டு கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். காவல் ஆணையர் அவர்கள் கொரோனா தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிதல், சோப்பு மற்றும் திரவ சுத்திகரிப்பான் கொண்டு அடிக் கடி கைகளை கழுவுதல், வர்த்தக நிறுவனங்கள், கடை கள் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை கடைபிடிக்கும்படி அறிவுரைகள் வழ ங்கி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவம் இயக்குநர் திரு.S.கணேஷ், இ.ஆ.ப, இணைஆணையாளர்கள் திரு.K.எழிலரசன், இ.கா.ப (போக்குவரத்து வடக்கு) திருமதி.P.K.செந்தில்குமாரி, இ.கா.ப (போக்குவரத்து தெற்கு) ஜெம் மருத்துவமனை இயக்குநர் திரு.s.அசோ கன், துணை ஆணையாளர்கள் திரு.ஜவஹர், இ.கா.ப, (அண்ணாநகர்) திரு.M.துரை, இ.கா.ப, (போக்குவரத்து வடக்கு), திரு.M.M.அசோக்குமார், (போக்குவரத்து மேற்கு), காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், கலந்து கொண்டனர்.