சென்னை பெருநகர காவல், E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்ததலைமைக் காவலர் (த.கா.17990) டி.கருணாநிதி, வ/48, த/பெ.துரைசாமி என்பவர் J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அயல்பணியில் பணிபுரிந்து கொண்டு குடும்பத்துடன், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள PRO காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். தலைமைக் காவலர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல், 13.4.2021 அன்று அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரு க்கு கொரோனா தொற்றுஏற்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்ததின்பேரில், பின்னர் மேல் சிகிச்சைக் காகநுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவம னையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தபோது, சிகிச் சை பலனளிக்காமல் தலைமைக் காவலர் கருணாநிதி 23.4.2021 அதிகாலை சுமார்05.00 மணியளவில் இறந் தார். இவருக்கு சுந்தரவள்ளி, பெ/வ.42 என்ற மனை வியும், சாய்கிஷோர், வ/15 என்ற மகனும் உள்ளனர். 23.4.2021 மாலை, என்பவர் J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய வளாகத்தில்நடைபெற்ற இறந்த தலைமைக் காவலருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் ,இ.கா.ப., அவர்கள் மறைந்த தலைமைக் காவலர் திரு.கருணாநிதி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி னார். தொடர்ந்து சென்னை பெருநகர காவல் அதிகாரி கள் மற்றும் காவல் ஆளிநர்கள், தலைமைக் காவல ரின் குடும்பத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்கள் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் மருத்துவர்N.கண்ணன், இ.கா.ப., (தெற்கு) திரு.T.செந்தில்குமார், இ.கா.ப, (வடக்கு) இணை ஆணையாளர்கள் திரு.V.பாலகிருஷ்ணன், இ.கா.ப (கிழக்கு), திருமதி.S.லட்சுமி, இ.கா.ப, (தெற்கு) திருமதி.P.K.செந்தில்குமாரி, இ.கா.ப (போக்குவரத்து தெற்கு) துணை ஆணையாளர்கள்திரு.V.விக்ரமன், இ.கா.ப (அடையார்), திரு.P.பகலவன், இ.கா.ப (திருவல்லிக்கேணி), திரு.D.ஹரிகிரண் பிரசாத், இ.கா.ப, (தி.நகர்) மருத்துவர் திருமதி.தீபாசத்யன், இ.கா.ப (போக்குவரத்துதெற்கு), திரு.K.பாலகி ருஷ்ணன், இ.கா.ப, (போக்குவரத்து கிழக்கு) திரு.K.பிர பாகர் (புனிததோமையர் மலை), மத்திய குற்றப்பிரிவு-2 துணை ஆணையாளர் திருமதி.K.மீனா (பொறுப்பு மயிலாப்பூர் காவல் மாவட்டம்), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.