ஊரடங்கில் பசிப்பிணியை விரட்டும் காவல் அதிகாரி

கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற் றுக்கிழமை முழு ஊரடங்கு என்பது தவிர்க்க முடியாத நிலையில் அமலில் உள்ளது. இன்று காலையில் செயிண்ட் தாமஸ் மவுண்ட் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட சேலையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துணை ஆணையர் K.பிரபாகர்
கண்காணிப்பு பணியில் இருந்தார். அந்த பகுதியில் ஆதரவற்ற, அன்றாட தேவைகளுக்கு போராடும் தினக்கூலிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேருக்கு காலை உணவு வழங்கினார். மேலும் முக கவசம், கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கினார். அப்பொழுது கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை அதிகமாக பரவி வருகிறது என்றும், அதிலி ருந்து பொதுமக்களாகிய நாம் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார். துணை ஆணையர் K.பிரபாகர் கடந்த ஆண்டு இதே போல ஊரடங்கு காலங்களில் கொரோனா பிணி துரத்திய போது பசிப்பிணி போக்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.காவல் துறைக்கு பெருமை சேர்க்கும் இவர் போன்ற அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் வாழ்த் துகள்!