ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது..அண்ணாத்த நடிகரின் வேண்டுகோள்

கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ் திரைப்படப் பத்திரிகை யாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு நிவாராணப் பொருட்களை வழங்கினார்.
நடிகர் திரு பாலா பேசுகையில்.. தன்னால் முடிந்த உதவிகளை யாரால் செய்ய முடிகிறதோ அவனே கோடீஸ்வரன். அந்த வகையில் நானும் என்னால் முடிந்த பல நல்ல காரியங்களை செய்து வருகிறேன். இதற்கிடையில் என்னை மதித்து இந்த நிகழ்வுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. மீடியாவின் சக்தி அளப்பரியது. அந்த சக்தியுடன் என்னையும் இணை த்துக் கொண்டு மேலும் பல நல்ல செயல்கள் செய்ய காத்திருக்கிறேன். தொடர்ந்து பேசிய நடிகர் பாலா அடுத்து தன் அண்ணன் நடிப்பில் சூப்பர் ஸ்டாருடன் நடித்துக்கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படம் குறித்து சில சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொண்டார். இது வரை 50க்கும் மேலான படங்களை ஐந்து மொழிகளில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. இந்தப் படத்திற்காக 15கிலோ எடை குறைத்திருக்கிறேன். மேலும் நான் ஒரு ரஜினி ரசிகன், அருகில் இருந்து அவரைப் பார்த்திருக்கிறேன். என்ன ஒரு மனிதர் அவருக்குள் கலைஞன் பிறவியிலேயே இருக்கிறார். அமைதியாக அமர்ந்திருக்கிறாரே என நினைத்தால் கடந்து செல்கையிலேயே நம்மைப் பார்த்து ஒரு ஹாய் சொல்லி விளையாட்டுத் தனமாக குறும்பு செய்து விட்டு செல்வார். காமெடி உணர்வு அவருக்குள் இயல் பாகவே இருக்கிறது. என்னைக் கேட்டால் அவர் அரசி யலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அவர் தொடர்ந்து தன் திறமையால் மக்களை மகிழ்விக்கட்டும். ஒரு ரசிகனாக அதையே நான் விரும்புகிறேன்’ என்றார்.