டவ்-தே மிக அதி தீவிர புயலாக வலுவடைந்து மே 18 தேதி குஜராத்தில் கரையைக்கிறது

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்த தகவல்களின் படி, கிழக்கு மத்திய மற்றும் அருகில் உள்ள தெற்கு மத்திய அரபிக் கடலில் கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த தீவிர புயல் டவு-தே, கிழக்கு மத்திய மற்றும் அதன் அருகில் உள்ள தெற்கு மத்திய அரபிக்கடலில் அமினிதிவிக்கு 190 கிலோமீட்டர் வடக்கு வட மேற்கிலும், பஞ்சிம் கோவாவுக்கு முன்னூற்று முப்பது கிலோமீட்டர் தெற்கு தென் மேற்கிலும், வேராவலுக்கு (குஜராத்) 930 கிலோமீட்டர் தெற்கு தென் கிழக்கிலும், பாகிஸ்தானின் கராச்சிக்கு 1020 கிலோமீட்டர் தெற்கு தென் கிழக்கிலும் மையம் கொண்டிருந்தது.
தீவிர புயல் "டவ்-தே" அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் மிக அதி தீவிர புயலாகவும் வலுவடைந்து வடக்கு,வடக்கு-மேற்கு திசையில் நகர்ந்து மே 18 மதியம் அல்லது மாலையில் குஜராத்தில் போர்பந்தர் மற்றும் நாலியாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிதீவிர புயலின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள மலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மே 15 அன்று பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.