வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அதிதீவிர புயலாக மாறும் வாய்ப்பு

இந்திய வானிலைத் துறையின்தேசிய வானிலைமுன்னறிவிப்பு மையம் இன்று மாலை விடுத்துள்ள தகவலில்கூறியிருப்பதாவதுவங்காள வரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்தம்இன்று காலை 11.30 மணியளவில் போர்ட் பிளேருக்கு வடமேற்கில் 560 கி.மீதொலைவில் காற்றழுத்தமாக  மையம் கொண்டிருந்தது.  இது அடுத்த 24 மணி நேரத்தில்வடக்கு மற்றும் வடமேற்குதிசையில் நகர்ந்து நாளை காலை  புயலாக தீவிரமடையும் எனத் தெரிகிறதுஇது தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில்நகர்ந்துமேலும் தீவிரமடைந்து மேற்கு வங்கம் மற்றும்வடக்கு ஒடிசா கடற்பகுதியை  மே 26 ஆம் தேதி காலைசென்றடையும்இது வடக்கு ஒடிசாமேற்கு வங்கத்தைகடந்துபாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையேமே 26ம்தேதி மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் எனத்தெரிகிறது

இதன் காரணமாகஅந்தமான் மற்றும் நிக்கோபார்தீவுகளில்இன்றும்நாளையும்பல இடங்களில் மிதமானமழையும்ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும்ஒடிசாவின் வடக்கு கடலோர மாவட்டங்களில் மே 25ம் தேதிபல இடங்களில் மிதமான மழையும்ஒரு சில இடங்களில்கனமழையும்பாலசூர்பத்ரக்கேந்திரபாராமயூர்பன்ஜ்உள்ளிட்ட சில இடங்களில் தீவிர கனமழையும் பெய்யும்மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் மே 25ம் தேதிஅன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும்.  மெதின்பூர்தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனாஸ்ஹவுரா மற்றும்ஹூக்ளி மாவட்டங்களில் கன மழை முதல் தீவிர கனமழைபெய்யும்