இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் என்னை ஏன் கட்சியிலிருந்து நீக்கினார்கள் என்று தெரியவில்லை. எனது முன்னாள் உதவியாளர் பிரகாசம் என்பவர் நான் ரூ.6 கோடி பெற்றதாக பொய்யான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதை சட்டரீதியாக சந்திப்பேன். விசாரணைக்காக காவல்துறை அழைத்தால், நேரில் ஆஜராகி உண்மையை வெளிக் கொணர்வேன். அவர் தனது சொந்த லாபத்திற்காக பெற்ற பணத்தை எல்லாம் நான் பெற்றதாக பொய் கூறியுள்ளார்.மக்களுக்கு தொண்டாற்ற நான் நினைக்கிறேன். தி.மு.க.வில் இணைவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இதுகுறித்து விரைவில் முடிவு எடுத்து உங்களுக்கு தெரிவிப்பேன். ஊழல் புகார் தான் என்னை நீக்கியதற்கு காரணம் என்று கூறினால், பல முன்னாள் அமைச்சர்கள் மீது, தற்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலின் கவர்னரிடம் புகார் அளித்துள்ளார். அப்படி என்றால் ஊழல் புகார் எழுந்த அமைச்சர்கள் அனைவரையும் நீக்குவார்களா?