கேரளாவில் தேவிகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தமிழில் பதவிபிரமாண உறுதி மொழி கூறி, பதவி ஏற்றுள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தீன் மாநில நிர்வாகியான வழக்கறிஞர் ராஜா, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் இருந்து அம் மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். கேரள சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தமிழில் பதவி ஏற்றது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.