சென்னை 26, மே.:- துறைமுகம் தொகுதி, அன்னை சத்தியா நகரில் வசிக்கும் ஏழை-எளிய 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபுவுடன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இணைத்து வழங்கினர். உடன் திமுக பகுதிச் செயலாளர்கள் எஸ். முரளி, எஸ். ராஜசேகர் பலர் உள்ளனர்.
சென்னை 26, மே.:- சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு கிழக்குப் பகுதி 110 வது வட்டக் கழக சார்பில் ஹாரிங்டன் சாலை, அப்பாதுரை தெருவில் மற்றும் சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம் விளக்கு கிழக்குப் பகுதி 111(அ) வட்டக் கழகம் சார்பில் கிரீம்ஸ் சாலையில், வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை, சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நே. சிற்றரசு மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் ஆகியோருடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இணைத்து வழங்கினர்.
சென்னை 26, மே.:- ஓட்டேரி மயானத்தில் கடந்த 16ம் தேதி ஆய்வு செய்து அவற்றில் சில பழுதடைந்தவற்றை உடனடியாக சீரமைக்கக் கோரி உரிய அதிகாரிகளை வரவழைத்து உத்தரவிட்ட நிலையில் நடைபெற்று வருகின்ற பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பார்வையிட்டார்.
சென்னை 26, மே.:- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பொருட்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர். உடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.
சென்னை 26, மே.:- எழும்பூர் தொகுதிச் சூளை பகுதியில் உள்ள உமா சுராஜ் பேலஸ்ஸில் உணவு வங்கியை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து, அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் முக கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கிய போது எடுத்தப்படம். உடன் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர், இ. பரந்தாமன், திமுக பகுதிக் கழகச் செயலாளர்கள்
சொ.வேலு, ஜெ.விஜயகுமார் மற்றும் பலர் உள்ளனர்.
சென்னை 26, மே.:- எத்திராஜ் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேதமுறை கொரோனா சிகிச்சை மையத்தை திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்னர். உடன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் பலர் உள்ளனர்
சென்னை 26, மே.:- சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு அருகே அமைந்துள்ள பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் அமையப் பெறவுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்னர். உடன் ஸ்டான்லி மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பாலாஜி, திமுக பகுதிக் கழக செயலாளர்கள் எஸ்.முரளி,
எஸ். ராஜசேகர், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.