திருப்பூர் 28, மே.:- திருப்பூர் மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை முறையாக குடிநீர் வழங்குவது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், புதிய திருப்பூர் குடிநீர் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் க.சிவக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார், இதில் மண்டல உதவி ஆணையர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.