அளித்த கொவிட் நிவாரண உதவிககளின் விவரங்களை இந்தியா அறிவித்தது

கொவிட் தொற்றின் பாதிப்பு பெரும் மடங்கு நாட்டில் உயர்ந்திருப்பதால் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளும்அமைப்புகளும் நிவாரண மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்கி வருகின்றன. 2021 ஏப்ரல் 27 முதல் மே 26 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் அனுப்பிய 18,006 பிராணவாயு செறிவூட்டிகள், 19,085 பிராணவாயு சிலிண்டர்கள், 19 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 14,514 செயற்கை சுவாசக் கருவிகள்சுமார் 7 லட்சம் ரெமிடெசிவிர் குப்பிகள், 12 லட்சம் ஃபேவிபிரவிர் மாத்திரைகள் ஆகியவை மாநிலங்களுக்கும்யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. 2021 மே 25/26 அன்று சிங்கப்பூர்,  ப்ரூனைஓமன்ஒன்டாரியோ (கனடா),  எகிப்துசிங்கப்பூர் ரெட்கிராஸ் சொசைட்டிசேவா இண்டர்நேஷனல் (ஆஸ்திரேலியா),  சுவிஸ் இண்டியா சேம்பர் ஆஃப் காமர்ஸ்,  ஃபோரம் ஆஃப் இண்டியன் ப்ரொஃபஷனல் (ஹாங்காங்),  வோக்ஸ்வேகன் (ஜெர்மனி) ஆகியவற்றிடமிருந்து  பெறப்பட்ட முக்கியப் பொருட்கள்:

• பிராணவாயு செறிவூட்டிகள்: 155

• பிராணவாயு சிலிண்டர்கள்: 900

• செயற்கை சுவாசக் கருவிகள்: 1,045

பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வழங்கப்படும் பொருட்கள் மாநிலங்களுக்கும்யூனியன் பிரதேசங்களுக்கும் துரிதகதியில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனை பிரத்தியேக ஒருங்கிணைப்பு மையத்தின் வாயிலாக மத்திய சுகாதார அமைச்சகம் விரிவாகக் கண்காணித்து வருகின்றது.