திமுக எம்.பி ஆ.ராசா, அண்மையில் ஒரு மேடையில், நான் இந்துக்களை தவறாக பேசினேன் என என் மீதுவழக்கு போட்டால், நான், பகவத் கீதை, மனு ஸ்மிருதி ஆகியவற்றை படித்து காட்டுவேன் என ஆவேசமாகபேசியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, ‘ நீகிருஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாது இருந்தால், பௌத்தனாக இல்லாதுஇருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும். அப்படி நீ இந்துவாக இருந்தால் சூத்திரனாக தான் இருக்கவேண்டும். சூத்திரன் என்றால் விபசாரியின் மகன் என்று அர்த்தம். நீ விபச்சாரியின் மகனாக இருக்கபோகிறாயா.?’ என ஆவேசமாக மனுஸ்மிருதி பற்றி ஆ.ராசா கூறினார்.
ஆ.ராசா கூறிய கருத்துக்களுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் களத்தில் அது சர்ச்சையாக உருவெடுத்து. இது குறித்து ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றஇந்து அமைப்பினர் குரல்களும் வலுத்து வருகின்றன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று முன்தினம் சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியஆ.ராசா, ‘ மன்னிப்பு கேட்க நான் தயார். எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்லு. நான் 2ஜியையே பார்த்தவன். இந்த வேலையெல்லாம் என்கிட்ட கூடாது. அங்கு மனுஸ்மிருதி பற்றி கருத்துஇருந்தது அதனால் அதனை பற்றி பேசினேன். ‘ என ஆவேசமாக தனது எதிர்கருத்தை பேசினார் திமுக எம்.பிஆ.ராசா.
இதனை தொடர்ந்து அண்மையில் ஆ.ராசா ஒரு மேடையில் பேசுகையில், ‘ நான் அவதூறாக பேசிவிட்டேன். வழக்கு போடுவோம். போடு.. அந்த நாளை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அப்போது தான் , நான், பக்வத்கீதையை , மனுஸ்மிருதி படிச்சி காட்டி , நீ யாருனு உலகத்துக்கு காட்டுவேன். அப்படி மட்டும் செய்யலைன்னாநான் கலைஞர் புள்ளடா.’ என ஆவேசமாக பேசினார்.