ஏ.ஏ.ஏ. சினிமா பிரைவேட் தயாரிப்பில் அருண் வசிகரன் இயக்கத்தில் திரிஷா, ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி ஆகியோரின் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘தி ரோட்‘. திரிஷாவின் கணவரும் அவரது மகனும் கன்னியாகுமரிக்கு காரில்பயணமாகிறார்கள். வழியில் விபத்து ஏற்பட்டு இருவரும் இறந்தும் விடுகிறார்கள். அதே இடத்தில் பலபேர்பல நேரங்களில் கார் விபத்தில் இறந்திருப்பது திரிஷாவுக்கு தெரியவருகிறது. இந்த கார் விபத்தைஏற்படுத்துவது யார்? எதற்காக? என்று கண்டுபிடிப்பதுதான் கதை. படத்தின் முன்பகுதி மர்மமாக செல்வதை ரசிக்க முடிகிறது. பின்பகுதியின்ஆரம்பத்திலேயே யார் காரணம் என்பது தெரிந்துவிடுவதால் உச்சக்கட்ட காட்சியில்பார்வையாளர்களுக்கு ஈர்ப்பு குறைந்துவிடுகிறது. ஒழுக்கமான பேராசிரியராக வேலை பார்க்கும் ஷபீர், ஒரு தவறான மாணவியினால் வேலையிழந்து மானமிழந்து தந்தையை இழந்து கடனாளியாகி ஊரைவிட்டுஓடி ஒழிந்து வில்லனானவரையுள்ள காட்சிகளில் நிறைவான நடிப்பை தந்துள்ளார். நெடுஞ்சாலையில் தொலைந்துபோன மனிதாபிமானங்களை திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் அருண் வசிகரன்.