மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் இன்று 21.09.2023 பால் உற்பத்திமற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின்செயலாட்சியர்களுக்கான பயிற்சி வகுப்பினை, சென்னை மாதவரம் பால்பண்ணையிலுள்ள ஆவின் திறன்மேம்பாட்டு மையத்தில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மாண்புமிகு பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் தொடக்க பால்உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாட்சியர்களுக்கான துறை சார்ந்த பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. முதற்கட்டமாக 12.09.2023 அன்று பயிற்சி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று காலை 10.00 மணியளவில் சென்னை, ஆவின் திறன் மேம்பாட்டு மையம், மாதவரம்பால் பண்ணையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் (திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், திருவாரூர்), மாவட்டங்களைச் சார்ந்த சரக துணைப்பதிவாளர்கள் (பால்வளம்) மாவட்ட கூட்டுறவுபால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பொது மேலாளர்கள் மற்றும் தொடக்க பால் உற்பத்தியாளர்கள்கூட்டுறவு சங்கங்களின் செயலாட்சியர்களாக பொறுப்பு வகிப்பவர்கள், கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி வகுப்பில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்குதல், உறுப்பினர்களுக்கு உரிய பால் தொகை வழங்குதல், புதிய கறவை மாடுகள் வாங்க கடன்வழங்குதல், புதிய சங்கங்களை உருவாக்குதல், தொடக்க சங்கங்களை இலாபத்தில் செயல்படுத்துவதற்கானஉத்திகள், செயலாட்சியரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், சட்டப்பூர்வ விதிமுறைகள் (Statutory Norms), பால் கூட்டுறவு தணிக்கை, வளங்களை முழுமையாக பயன்படுத்துதல், சமநிலைப்புள்ளியினை எட்டுதல், தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் மொத்தம் 62 நபர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.